கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கோடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார்.
இதுதொடர்பான விசாரணை முடங்கியிருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தீவிரமாக மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. கோடநாடு வழக்கில் சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்த சமயத்தில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவிட்டிருந்தார். கோடநாடு வழக்குகளை தனிப்படை விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…