கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று தொடக்கத்திலேயே எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக, ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது மீண்டும் புதிதாக வந்து இருக்கக்கூடிய அரசு கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு உடனடியாக முதல்வர் மு.க. ஸ்டாலின், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அதிமுகவினரின் போக்கு உள்ளது என பேசியுள்ளார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். இதுமட்டுமில்லாமல் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பேஜ் அணிந்துகொண்டு சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து, தற்போது பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…