கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலாவை விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு,அதன் பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக சோலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு,இது தொடர்பான வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதனையடுத்து,இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலா,இளவரசன்,சுதாகரன் ஆகியோரையும்,நீலகிரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர்,முன்னாள் எஸ்பி முரளி,கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்,அதிமுக நிர்வாகி சஞ்சீவன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.ஆனால்,கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க நீலகிரி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலாவை விசாரிக்க,இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு,சதீசன்,சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சயான் பேசியுள்ள நிலையில்,அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது”,என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…