#Breaking:கோடநாடு வழக்கு;முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலாவை விசாரிக்க மனு…!

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலாவை விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு,அதன் பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக சோலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு,இது தொடர்பான வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதனையடுத்து,இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலா,இளவரசன்,சுதாகரன் ஆகியோரையும்,நீலகிரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர்,முன்னாள் எஸ்பி முரளி,கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்,அதிமுக நிர்வாகி சஞ்சீவன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.ஆனால்,கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க நீலகிரி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலாவை விசாரிக்க,இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு,சதீசன்,சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சயான் பேசியுள்ள நிலையில்,அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது”,என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்! “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் வரை!
February 18, 2025
தலைமை தேர்தல் அதிகாரியாக ஞானேஷ் குமார் பொறுப்பேற்பு.!
February 19, 2025
நகைப்பிரியர்கள் ஷாக்: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! கிராமுக்கு ரூ.8,000 ஆயிரத்தை கடந்தது..
February 19, 2025
விராட் கோலி பார்மில் இல்லையா? ‘சிங்கம் எப்பவும் சிங்கம் தான்’ பயிற்சியாளர் அதிரடி!
February 19, 2025
திருப்பூரில் கொடூரம்! கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை!
February 19, 2025