#BREAKING: கறுப்பர் கூட்டம் -குண்டர் சட்டம் ரத்து..!
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சார்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோவை பதிவு செய்த சோமசுந்தரம், வீடீயோவை எடிட் செய்த எடிட்டர் குகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனசேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சுரேந்திர,ன் செந்தில் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்தபோது,தங்கள் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது மூடநம்பிக்கை, கல்வியறிவின்மை ஒழிப்பதற்க்கவே தங்கள் வீடியோவை விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் காவல்துறை தரப்பில் ஒரு குற்றத்திற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கக்கூடாது என்ற எந்த விதியும் இல்லை, கருப்பர் கூட்டத்தின் பதிவில் இந்து மதத்தின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சார்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.