#Breaking:தி.மலையில் கருணாநிதி சிலை;நீங்கியது தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Default Image

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திருவண்ணமலையில் வேங்கைக்கால் பகுதியில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக தற்காலிக தடை விதித்திருந்தது.பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை அனுமதிக்க கூடாது என்று கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்,வேங்கைக்கால் பகுதியில் கருணாநிதி சிலை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்திருந்தது.

மேலும்,சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.அதே சமயம்,தமிழக அரசு,திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்,அமைச்சர் எ.வ.வேலு,ஜீவா கல்வி அறக்கட்டளை பதில் தரவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு திருவண்ணமலையில் சிலை வைக்கப்படுவதை எதிர்த்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும்,மனு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து,வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால்,திருவண்ணாமலையில் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான தடை நீங்கியது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்