கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது .
தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் கராத்தே தியாகராஜன். இவர் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் இணைந்தார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஓன்று திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்தார்.அதில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் உள்ளாட்சி தேர்தலில் 35 % இடங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இவரது பேட்டி திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லாக்கு தூக்குவது? என்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பதிலடி கொடுத்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கராத்தே தியாகராஜன் கூறுகையில்,திருச்சியில் வெற்றிபெற்ற திருநாவுக்கரசர் தனது செல்வாக்கை பயன்படுத்திவெற்றிபெற்றதாக கூறியதே கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
கராத்தே தியாகராஜன் சர்ச்சை பேச்சு தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் ,கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் கே.சி .வேணுகோபால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ,கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நடவடிக்கை தற்போது முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…