#BREAKING: கனியாமூர் பள்ளி வன்முறை – கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல்!
கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல் விதிப்பு.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல் விதிக்கப்பட்டது. கைதான 5 பேரையும் 24 மணிநேரம் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சரண்குரு, கோபு, மணிகண்டன், பிரதீப் ஆகியோர் கடந்த 18-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது.