#Breaking: காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்திக்கின்றனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்திய நிலையில், கமல் தற்போது வழக்கு தொடுத்துள்ளார்.
மேலும் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரான நிலையில், விபத்து நடந்தது எப்படி என நடித்துக்கட்டுமாறு துன்புறுத்துவதாக கமல் புகார் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.