#breaking: கல்பாக்கம் கிராமங்கள் – பத்திரப் பதிவுக்கு தடையில்லை.!
கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய ஆட்சேபனை இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம் என கடந்த 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய கதிர்வீச்சிக்கு உட்பட்ட 14 கிராமங்கள், பேரூராட்சிகளில் பத்திர பதிவுக்கு ஆட்சேபனையில்லை என தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரசிதழில் குறிப்பிட்டுள்ள சர்வே எண் இடங்களை பத்திரப் பதிவு மேற்கொள்வதற்கு ஆட்சேபனை இல்லை என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.