#BREAKING: கள்ளக்குறிச்சி கலவரம் – மேலும் 4 பேர் மீது குண்டாஸ்!

Default Image

கள்ளக்குறிச்சி கலரவம் தொடர்பாக மேலும் 4 பேரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. அதன்படி, சர்புதீன், சரண்ராஜ், லட்சாதிபதி, மணி ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாணவர்கள் சான்றிதழ், வாகனங்களை எரித்து முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. பள்ளியில் இருந்த சான்றிதழ்கள், பேருந்து, போலீஸ் வாகனத்தை தீயிட்டு எரித்தது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கலரவத்தில் இதுவரை 26 சிறுவர்கள் உள்ளிட்ட 399 பேரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். அதில் இதுவரை பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ரத்து செய்ய வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.

பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்துள்ளார். தலைமை நீதிபதி அமர்வில் அளித்த மனுவில் ரத்தினம் உள்பட 70 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்துள்ளனர். இதனை வேறு ஒரு நாளில் முறையீடு செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்