பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவர்கள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, மாணவிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதவி பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்தனர். இதனையடுத்து, ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனுவையும் சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இணையதளம் உருவாக்கம்
இந்த நிலையில், பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவர்கள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புகாரளிக்க விரும்பும் மாணவர்கள், http://www.reachoutsupport.co.in/ என்ற இணையதள முகவரியில் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அமைத்த மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவராக உள்ள நீதியரசர் கண்ணன் கூறுகையில், மாணவர்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிரப்படாமல் ரகசியமாக காக்கப்படும். புகாரை சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்திலும் நேரில் வந்து அளிக்கலாம் என்று அவர் அறிவித்துள்ளார்.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…