கச்சத்தீவு தேவாலய விழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் கச்சத்தீவில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அந்தோணியார் கோவில் திருவிழா மிகவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் கலந்து கொள்வதுண்டு. இந்நிலையில், இந்த விழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு தடை விதித்துள்ளதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கச்சத்தீவு விழாவிற்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வரின் இந்த கடிதத்தை டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் திமுக எம்.பி.டி.ஆர்.பாலு அவர்கள் வழங்கினார். அக்கடிதத்தில் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கை அரசிடம் அனுமதி பெற்றுத் தருமாறும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பது உணர்வுபூர்வமாக கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள திமுக எம்.பி.டி.ஆர்.பாலு அவர்கள், ‘இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் பிப்ரவரி 6-ம் தேதி டெல்லி வரும்போது கச்சத்தீவு தேவாலயத்தில் தமிழ்நாடு பக்தர்களுக்கு அனுமதி தொடர்பாக பேசுவதாக வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…