#BREAKING: கச்சநத்தம் கொலை வழக்கு – 27 பேருக்கு ஆயுள் தண்டனை!
கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு.
கச்சநத்தத்தில் கடந்த 2018ல் நடந்த மோதலில் பட்டியலினத்தவர் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018ல் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலையடுத்து ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேர் குற்றாவளிகள் என கடந்த 1-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தற்போது 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.