#BREAKING: சிபிஎம் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வு.
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். மேலும், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு பொறுப்பில் இருந்து அ.சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், 21-ஆவது மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக சு.வெங்கடேசன், கே.பாலபாரதி, கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், ஜி.சுகுமாறன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.