திருச்சி மாநகராட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் இல்லத்தில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் MP என்ற தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பணமோசடி புகாரின் அடிப்படையில் திருச்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும்,தமிழகம் முழுவதும் மொத்தமாக 50 இடங்களிலும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தனியார் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர்.திருச்சியில் இயங்கும் இந்த நிறுவனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தலைமை ஏற்று,குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியது.
அதனடிப்படையில்,திருச்சி மாநகராட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் இல்லத்தில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது மாமியார் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…