#BREAKING: அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் பரிசுப் பொருட்கள் காணவில்லை!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் காணவில்லை என தகவல்.

கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பினருக்கு இடையே நடந்த கலவரத்தை தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மூடி சீல் வைத்தார். இதன்பின் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருதரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்டது. இதன்பின் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்குமாறு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகளால் அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு, அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம், மனோகரனிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் மீண்டும் திறக்கப்பட நிலையில் இபிஎஸ் தரப்பினர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை காணவில்லை என தகவல் கூறப்படுகிறது. அதன்படி, மூன்றாவது தளத்தில் இருந்த ஹார்டு டிஸ்க், செங்கோல் உள்ளிட்ட விலை உயர்ந்த மற்றும் முக்கியமான பொருட்களை காணவில்லை என கூறப்படுகிறது. கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தின் போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயமானது என்றும் காணாமல் போன பொருட்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.

10 நாட்களுக்கு பிறகு சீலை அகற்றி அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே, அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் புகார் கொடுக்க ஈ.பி.எஸ். தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IPL Auction : களைகட்டப் போகும் சவுதி..! இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம்..!

IPL Auction : களைகட்டப் போகும் சவுதி..! இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம்..!

சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…

2 minutes ago

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

15 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

16 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

16 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

17 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

17 hours ago