#BREAKING: நகைக்கடன் தள்ளுபடி – சிறப்பு தணிக்கை செய்ய அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
பொது நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய மண்டல, மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 40 கிராம் வகையிலான (அதாவது 5 சவரன்) நகைக்கடன் தள்ளுபடி விவரங்கள் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில், அயல் மாவட்ட தண்ணிக்கையாளர்கள் மூலம் சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு தற்போது ஆணையிட்டுள்ளது.
கடந்த 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்து, இதுவரை 13 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள நகைகளை ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில், இறுதி தணிக்கை செய்ய அதிகாரிகளை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.