கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் முறைக்கேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அவ்வாறு,தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,கடன் வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள்,முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,ஒரே ஆதார் எண்ணைப் பயன்படுத்தி,ஒரே நபர் பல கூட்டுறவு சங்கங்களில் லட்சக் கணக்கில் பல நகைக்கடன்களை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.மேலும்,போலி நகைகளை வைத்து கடன் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக,தூத்துக்குடியில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில்,261 பொட்டலங்கள் ஆய்வின்போது இருப்பில் இல்லை.அதன்மதிப்பு,ரூ.1.98 கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு இன்று உத்தர பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…