முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆறுமுகசாமி ஆணையம்
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இவரது மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.
ஓபிஎஸ்-க்கு சம்மன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி ஆஜர்
தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகியுள்ளார். இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆஜராகவுள்ளார். ஓபிஎஸ் அவர்களுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டு, பல்வேறு காரணங்களால் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…