#BREAKING: ஜெயலலிதாவின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு.!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் கே.பி அன்பழகன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது.
இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி 24-ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் திறக்கப்பட்ட புதிய சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.