மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவு பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி புகழேந்தி கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பிடமும் ஏற்கனவே ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திருந்தது. இந்த நிலையில் அணைத்து தரப்பு விசாரணையும் நிறைவு பெற்றுள்ளது.
இதனால் அடுத்தகட்டமாக விசாரணை அறிக்கையை நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்ய உள்ளது. அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜூன் 24-க்குள் தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டு உள்ளதாகவும், தற்போது விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில் நாளை முதல் அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் தகவல் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 159 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…