ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைவதை தடுக்க பாதுகாப்பு தேவை. அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமச்சர் சிவி சண்முகம் ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கட்சியில் உறுப்பினர் அல்லாத ஒருவர் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை எப்படி கோர முடியும் என கேள்வி எழுப்பினார். இதனிடைய, அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, நேற்று எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தார். அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நீதிமன்றம் அனுமதி அளித்தால் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…