வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம்,தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும்,நாளையும் வெப்பநிலை ஏற்கனவே உள்ளதை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை:
சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும்,அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
unknown node