#BREAKING : திருச்சியில் இறந்த இளைஞருக்கு இன்புளுயன்சா இருந்தது கண்டுபிடிப்பு..!
திருச்சியில் உயிரிழந்த இளைஞருக்கு இன்புளுயன்சா இருந்தது கண்டுபிடிப்பு.
பெங்களூருவில் பணியாற்றி வந்த திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கோவாவுக்கு சுற்றுலா சென்று கடந்த 9-ம் தேதி ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், அந்த இளைஞருக்கு திடீரென, மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் என உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞருக்கு இன்புளுயன்சா
இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு இன்புளுயன்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சலை தடுக்க அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தபட்டு வருகின்றன. அதே போல் சமீப காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.