#Breaking:சட்டப் பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்க திட்டமா?
சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சளியில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, மறுநாள் 14ம் தேதி முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து,நேற்று முதல் மாநில பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில்,தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா (மாநிலங்களவை) இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.மேலும்,2021 மார்ச் 23-ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்பி முகமது ஜான் காலமானதை அடுத்து, தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலினை செப்டம்பர் 1ம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மூன்று இடங்கள் காலியாகவுள்ள நிலையில், தற்போது ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,இன்று மதியம் அலுவல் ஆய்வுக்குழு கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், செப்டம்பர் 21 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,அதில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.