#BREAKING: ஜவ்வரிசியில் கலப்படமா ? – ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
கலப்படம் செய்து ஜவ்வரிசி விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜவ்வரிசியில் வேதிப்பொருள் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவுப் பாதுகாப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று ஜவ்வரிசி பொட்டலங்களை வெவ்வேறு கடைகளில் இருந்து கொண்டுவர செய்த உயர்நீதிமன்றா நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அவற்றை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
ஜவ்வரிசி மாதிரிகளை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜவ்வரிசி உற்பத்தியில் வேதிப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க கோரி நடராஜன் என்பவர் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.