#Breaking:நாளை 16 மாவட்டங்களில் மிரட்டப் போகும் கனமழை – வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி, கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு,தருமபுரி,கிருஷ்ணகிரி, சேலம்,நாமக்கல்,திருச்சி,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதனிடையே,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.மேலும்,சென்னையை பொறுத்தளவில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 14, 2022