#BREAKING : பயங்கரவாதிகளுடன் தொடர்பு? கோவையில் 3 பேரிடம் விசாரணை
கோவையில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரிடம் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
மத்திய உளவுத்துறை நேற்று தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்தது.இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ரயில்,பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், வணிகவளாகங்களில் காவல்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் இதன் தொடர்ச்சியாக காவல்த்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேரிடம் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த மூவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.3 பேரில் இருவர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கோவையை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.