#BREAKING: தீவிரமடையும் விசாரணை..கள்ளக்குறிச்சி பள்ளியில் 2வது நாளாக சிபிசிஐடி ஆய்வு!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் அமைந்துள் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மனைவி ஸ்ரீமதி கடந்த 13-ஆம் தேதி மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெற்றோர்கள் மாணவி தற்கொலை செய்யவில்லை, அவரது மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சமயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.
இந்த கலவரத்தால் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பிறகு நான்காவது நாளாக பள்ளி காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. மாணவியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டார். அந்தவகையில், மாணவியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மூன்று தினங்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளியில் நேற்று முதல் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாணவி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் வளாகத்தில் இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாணவியின் உடல் மறு கூராய்வு முடிந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை வேறு யாரேனும் தள்ளியிருந்தால் அதன் பாதிப்பு எந்த அளவிற்கும் இருக்கும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன் நேற்று கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி வளாகத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள், மாணவி போல் உருவ பொம்மை ஒன்றை தயார் செய்து அதை மாடியில் இருந்து குதிக்க வைத்து பரிசோதனை செய்தனர். பொம்மை விழுந்ததை வைத்து, இடத்தின் தன்மை, தூரம் உள்ளிட்டவைகளை பதிவு செய்துகொண்டனர். இந்த பொம்மையை தள்ளிவிடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக வன்முறை மாணவி மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.