#BREAKING: நடராஜன் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்.!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளி நபர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய் நாடு திரும்பும் நடராஜன், கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சேலம் சின்னப்பன்பட்டியில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமைக்கப்பட்ட மேடை அகற்றப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளி நபர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஊர்வலமாக நடராஜனை அழைத்து வரவேண்டாம் என ஊர் மக்களுக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடராஜன் வெளிநாட்டில் இருந்து வருவதால் விதிப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவ அதிகாரி அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து சேலம் வரும் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க ஊர் மக்கள் திட்டமிடப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.