கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னை தலைமை செயலக காலனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,கஞ்சா மற்றும் கத்தியுடன் விக்னேஷ்,சுரேஷ் என்பவர் பிடிபட்ட நிலையில்,அதன்பின்னர்,போலீஸ் விசாரணையில் விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த வேளையில்,தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.மேலும்,கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியிருந்தார்.இதனையடுத்து,கைதி விக்னேஷ் மரணத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.
இதையடுத்து,கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற முதல்வர் உத்தரவிடாததை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் கூறியதாவது:”உயிரிழந்த விசாரணைக் கைதியின் உடலில் 13 இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வழக்கை கொலை வழக்காக பதிய முதல்வரே உத்தரவிட்டுள்ளார். அப்படியிருக்க தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது.சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,அண்மையில் விக்னேஷ் கைது செய்யப்பட்டபோது விசாரணையில் ஈடுபட்ட தலைமை செயலக காவல் நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகிய இருவரும் சிபிசிஐடி போலீசாரால் தற்போது கைது செய்யப்படுள்ளனர்.விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்ற 10 மணி நேர விசாரணைக்கு பிறகு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…