சமூகநலத்துறையே தொடர்ந்து LKG, UKG வகுப்புகளை நடத்தும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. தமிழகத்தில் உள்ள 2,381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன.
அதன்படி மாநிலம் முழுவதும் 2,381 பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. ஆனால், வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என தகவல் வெளியாகியிருந்தது. பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடி மையங்களிலேயே மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், 2,381 அங்கன்வாடிகளில் நடத்தப்பட்டு வரும் LKG, UKG வகுப்புகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்று சமூகநலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், சமூகநலத்துறையே தொடர்ந்து LKG, UKG வகுப்புகளை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை…
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…