#BREAKING: LKG, UKG வகுப்புகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது – சமூகநலத்துறை விளக்கம்

Default Image

சமூகநலத்துறையே தொடர்ந்து LKG, UKG வகுப்புகளை நடத்தும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. தமிழகத்தில் உள்ள 2,381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன.

அதன்படி மாநிலம் முழுவதும் 2,381 பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. ஆனால், வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என தகவல் வெளியாகியிருந்தது. பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடி மையங்களிலேயே மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், 2,381 அங்கன்வாடிகளில் நடத்தப்பட்டு வரும் LKG, UKG வகுப்புகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்று சமூகநலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், சமூகநலத்துறையே தொடர்ந்து LKG, UKG வகுப்புகளை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்