BREAKING: சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு தொற்று.!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது . இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவருக்குகொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதுநிலை வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை மூலமாக இன்று காலை கடலூரில் 107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.