சென்னை:மறைமுகத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது.
இதனைத்தொடர்ந்து,மாநகராட்சி மேயர்,துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்,மறைமுகத் தேர்தலில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் உயர்நீதிமன்ற கிளையை அணுகலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே,மறைமுகத் தேர்தல் நடவடிக்கை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் வாதிட்டது. மேலும்,மறைமுகத் தேர்தலை தள்ளி வைக்கும் திட்டமில்லை எனவும்,உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் வாதிட்டது.
மறைமுகத் தேர்தலை தள்ளி வைக்ககூடாது என தேவகோட்டை அதிமுக கவுன்சிலர்கள் மனு அளித்திருந்த நிலையில்,தேர்தல் தள்ளிவைப்பு பற்றி அச்சம் கொள்ள காரணம் இல்லை எனக்கூறி இது தொடர்பான வழக்கு முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள்…