#BREAKING: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சர் உத்தரவு!
தமிழக அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 17%ல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.8,894 நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதில், அகவிலைப்படி 17%ல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், இதற்கு ரூ.8,724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சி & டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.169.56 கோடியை ஒதுக்கி முதல்வர் அறிவித்துள்ளார்.