#Breaking:அடுத்த 24 மணி நேரத்தில்…வங்கக்கடலில் உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக முன்னதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் மார்ச் 2-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்,மார்ச் 3 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும்,வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதால், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு, மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.