அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதே வேளையில்,அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர். அதன்பின்னர்,அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் வந்த பிரச்சார வாகனத்தில் ஏற்றினர்.அதன்பின்னர்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும்,அதிமுக தலைமை அலுவலகம் பகுதியை சுற்றிலும் சட்டவிரோதமாக கூடக் கூடாது என 145 தடை உத்தரவு கோட்டாட்சியாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஈபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி,அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அளித்துள்ள புகாரில்,அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முக்கிய ஆவணங்கள், விலையுயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் வந்த பிரச்சார வாகனத்தில் கொண்டு சென்று விட்டதாகவும்,அதனை மீட்டு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,ஓபிஎஸ்,வைத்திலிங்கம்,ஜேசிடி பிரபாகரன்,மனோஜ் பாண்டியன்,புகழேந்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…