#Breaking: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை – அதிமுக
தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டை காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், தமிழக மக்கள் உயர்வுக்கும், சமூகநீதி பாதுகாக்கும் அடிப்படையாக பின்பற்றக்கூடிய 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்துக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதிமுக அமையவிருக்கும் தமிழக அரசிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது. தீர்ப்பின் எதிரொலியாக 69% இடஒதுக்கீடு என்னவாகுமோ என்ற கவலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டை காக்க சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதிமுக #AIADMK #EdappadiPalaniswami #OPanneerselvam @AIADMKOfficial #MKStalin @arivalayam #TNGovt pic.twitter.com/fYNXiaz3NG
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 6, 2021