கொரோனா தடுப்பூசி போடாத மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்று மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் 07.12.2021-க்குள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என்றும் மதுரை மண்டல மின்வாரியம் சற்று முன்னதாக உத்தரவு பிறப்பித்து,அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள்,மதுரை மண்டல அலுர்கள்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்நிலையில்,கொரோனா தடுப்பூசி போடாத மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்று மதுரை மண்டல மின்வாரிய பொறியாளர் உமாதேவி தெரிவித்துள்ளார்.மேலும்,ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…