#Breaking: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராகவும், நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளராகவும், புதிய ஆணையராக உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தப்படியாக ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்படுவதாகவும், போக்குவரத்துத்துறை செயலாளராக இருந்த கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டும், சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டும், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டும் தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
IAS Transfers & Postings#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/Ha80R6Kf4h
— TN DIPR (@TNDIPRNEWS) May 13, 2023