#BREAKING : சமூகநீதி கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை…! முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம்..!

Published by
Castro Murugan

அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை. ஒரு அமைப்பை தொடங்குவதற்கு முன் ஒத்த கருத்து கொண்டவர்களை அழைத்துப் பேசி விவாதிக்க வேண்டும். விவாதிக்காமல் அமைப்பை ஏற்படுத்தி விட்டு பிரதிநிதியை நியமிக்க கூறுவது கூட்டாட்சிக்கு முரணாக உள்ளது.

 தங்களின் கடிதத்தை துருவித்துருவி பார்த்தபோது தமிழக மக்களின் நலன் எதுவும் இல்லை. நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து நீட் போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். சமூகநீதியில் தான் இப்படி எனில் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்துவதிலும்  திமுக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

Recent Posts

விடிய காலையே சோகம்… அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு!

விடிய காலையே சோகம்… அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு!

குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், சம்பவ…

3 minutes ago

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

10 hours ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

10 hours ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

12 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

13 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

13 hours ago