#BREAKING : சமூகநீதி கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை…! முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம்..!

அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை. ஒரு அமைப்பை தொடங்குவதற்கு முன் ஒத்த கருத்து கொண்டவர்களை அழைத்துப் பேசி விவாதிக்க வேண்டும். விவாதிக்காமல் அமைப்பை ஏற்படுத்தி விட்டு பிரதிநிதியை நியமிக்க கூறுவது கூட்டாட்சிக்கு முரணாக உள்ளது.
தங்களின் கடிதத்தை துருவித்துருவி பார்த்தபோது தமிழக மக்களின் நலன் எதுவும் இல்லை. நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து நீட் போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். சமூகநீதியில் தான் இப்படி எனில் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்துவதிலும் திமுக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அஇஅதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை.
‘நீட் தேர்வு ரத்து’ போன்ற மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று திரு.@mkstalin அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். #NEETExam pic.twitter.com/4JPl9dw1Zz
— O Panneerselvam (@OfficeOfOPS) February 5, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025