#BREAKING : ஹைட்ரோகார்பன் கிணறு… பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு ..!
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி அவசியமில்லை என்ற உத்தரவை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்க்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தேவைப்பட்டது. மேலும் இத்திட்டங்களுக்கு மத்திய அரசுதான் அனுமதி வழக்கும். ஆனால், கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2006-ல் மத்திய சுற்றுச்சூழல் திருத்தம் செய்தது.
அதில், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கானஆய்வுக் கிணறுகளுக்கு மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டாம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.