இந்தியாவின் எண்ணை வளங்களை கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்தல் மற்றும் வளங்களை கண்டறிதல் என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017 ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் எடுக்க திட்டமிடப்பட்டது .ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது கட்டாயம் இல்லை எனவும் , மேலும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த தேவையில்லை எனவும் மத்திய அரசு கூறியது. இந்த உத்தரவிற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எனவே குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபைகள் நடைபெற்ற கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பி.ஆர்.பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்ற சுற்றறிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…