#BREAKING: எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? – கார்த்தி சிதம்பரம் ட்வீட்!
எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ட்வீட்.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, மும்பை சென்னையில் நுங்கப்பாக்கம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்று கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு பணபரிவர்தனையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாரில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சிபிஐ ரெய்டு குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என்றும் இது ஒரு ரெக்கார்ட் ஆக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
I have lost count, how many times has it been? Must be a record.
— Karti P Chidambaram (@KartiPC) May 17, 2022