#BREAKING: ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து நாளை முடிவு.. மருத்துவமனை நிர்வாகம் ..!
ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவுமில்லை, ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளது. ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் முழு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஜினிக்கு மேலும் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதால் நாளை காலை முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.