#Breaking : நாளை 3 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை …!
நாளை திருவாரூர், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் நீர் தேங்கி உள்ளதால், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர் மழை பெய்து வரும் சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளை தூத்துக்குடி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.