Breaking: தமிழகத்தில் LKG, UKG மாணவர்களுக்கு விடுமுறை … அரசு அறிவிப்பு ..
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவை ஒட்டியுள்ள நெல்லை ,கன்னியாகுமரி , தேனி , திருப்பூர் , நீலகிரி ,தென்காசி கோவை , ஆகிய மாவட்டங்களுக்கு 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சத்திஸ்கர், பீகார் ,டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு வருகிற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.